தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
— M.K.Stalin (@mkstalin) July 16, 2026
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய… pic.twitter.com/CCEO50AKrX
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த ஆலோசனைக்குப்பின் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள். ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.