×

“மக்களின் நலனை எண்ணாமல் சிலிண்டர் விலையை ஏற்றுவது சரியல்ல”- மு.க.ஸ்டாலின்

 

தேர்தலுக்கு பிறகு பணவீக்கம் அதிகரிக்கும் என முன்பே எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  பிப்ரவரி மாதம் முதல் இதுவரை, விலை ₹1,380 உயர்ந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் சுமார் 81% உயர்ந்துள்ளது. இதனால் டீ கடைகள், தாபாக்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.