“சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!”- மு.க.ஸ்டாலின்
காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு மாண்புமிகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், #CMBreakfastScheme, #NaanMudhalvan, #PudhumaiPenn, #TamilPudhalvan போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் — #ElectionManifesto-வில் குறிப்பிடப்படாதவை!