"புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்"- மு. க. ஸ்டாலின்
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், கழக ஆட்சியில்,
📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று,
📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,
📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,
📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்
என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.