உள்நாட்டுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது- மு.க.ஸ்டாலின்
Jul 10, 2025, 17:05 IST
உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.