×

மெட்ரோ ரயிலில் லேடிஸ் சீட்டில் அமர்ந்தாரா ஸ்டாலின்?

 

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து பயணித்தது பெண்கள் இருக்கை என பலரும் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பிவரும் நிலையில், அது லேடிஸ் சீட் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

சென்னை மெட்ரோவில் முதல்வர் ஸ்டாலின் பெண்கள் இருக்கையில் அமர்ந்து பயணித்ததாக தவறாக பரப்புகிறார்கள். முதலில் சென்னை மெட்ரோவில் பெண்கள் கம்பார்ட்மெண்ட் தான் இருக்கிறது. அதில் ஆண்கள் யாரும் செல்ல மாட்டார்கள். பொது கம்பார்ட்மெண்ட்களில் பெண்கள் இருக்கைகள் என்று எதுவும் தனியாக இல்லை.

ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு மேல் ‘Priority Seating’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீட்டில் யார் வேண்டுமானும் உட்காரலாம். ஆனால் கற்பிணிப் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் என யாராவது ’அவசிய தேவை’ உள்ளவர்கள் வந்தால் அவர்கள் உட்கார வழிவிடவேண்டும்.