×

நம்பர் 1 முதல்வர் அல்ல நம்பர் 1 தமிழ்நாடு என்பதே எனக்கு பெருமை- மு.க.ஸ்டாலின்

 

திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு அண்ணா , பெரியார் இருபெரும் தலைவர்கள் முதன் முறையாக சந்தித்துகொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் 3 வது முறையாக திருப்பூருக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின்  சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தல் , புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் , திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு , தங்கம் தென்னரசு , முத்துச்சாமி , ராமச்சந்திரன் ,  மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் , மாவட்ட ஆட்சியர் , காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் முடிவுற்ற 28.17 கோடி மதிப்பிலாம 20 திட்டப்பணிகளை துவங்கி வைத்தார். புதிதாக 41.24 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 4335 பயனாளிகளுக்கு 55.65 கோடி ருபாய் மதிப்பிலாம நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த ஐந்து மாதம் மட்டுமல்ல 5 ஆண்டுகளுக்கும் இதேபோல்தான் திமுகவினர் ஆட்சி செய்வோம்.  திமுக ஆட்சி அமைந்தபோது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது இனத்தின் ஆட்சியாக இருக்கும் என தெரிவித்தேன், அதேபோல் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம், திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற பெயர் எடுத்தோம் ஆனால் கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என பேச விரும்பவில்லை. அரசியல் பேச விரும்பவில்லை, அதற்கென வேறு மேடை இருக்கிறது 

கடந்த 10 ஆன்டுகாலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின் மாக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது அதற்குள் இவ்வளவு செய்திருக்கிறோம் என்றால் இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்ய விருக்கிறோம் என எண்ணி பாருங்கள். நம் பணிகளை, சாதனைகளை அன்டை மாநிலம் மட்டுமல்ல அண்டை நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன. அவை எனக்கான பாராட்டுக்கள் அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கானது. நம்பர் 1 முதல்வர் அல்ல நம்பர் 1 தமிழ்நாடு என்பதே எனக்கு பெருமை. உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள்” என கூறினார்.