×

"தனக்கு பதவி மட்டும் கிடைத்தால் போதும் என ஈபிஎஸ் நினைக்கிறார்" - மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டிற்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்துதான் வரும். தமிழ்நாட்டின் வடக்குவாசல் திருவள்ளூர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் திமுக பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு, NDAக்கு No Entry ஆக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் NDA என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் தயாரா?. தனக்கு பதவி மட்டும் கிடைத்தால் போதும் என நினைக்கிறார் ஈ.பி.எஸ். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். வாய் மூடி இருக்க நாங்கள் அடிமை சாமி கிடையாது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07%மட்டுமே. ஆனால் இன்றைக்கு 11.9% வளர்ச்சி. இந்தியாவுக்கே ரோல் மாடல் தமிழ்நாடு.

திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு இங்கு சிக்னல் கிடைக்காது. என்.டி.ஏ கூட்டணிக்கு நோ என்ட்ரி என்பதை காட்ட வேண்டும். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டியுள்ளது. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. உண்மையாக உழைத்தால் ஊரே நம்மை ஏற்றி வைத்து கொண்டாடும்.” என்றார்