‘முடிஞ்சிடுச்சு' என்று சொன்னேன் அது வைரலாகிவிட்டது- முதலமைச்சர் ஸ்டாலின்
செய்தியாளர்கள் 'கூட்டணி முடிஞ்சிடுச்சா?' என்று கேட்டார்கள், 'முடிஞ்சிடுச்சு' என்று சொன்னேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகலப்பாக உரையாற்றினார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளுடன் வெற்றிகரமான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறேன். நேற்று நான் காரில் ஏறும்போது கொடுத்த ஆக்ஷன், தற்செயலாக செய்தது; அது இன்றைக்கு வைரலாகிவிட்டது. செய்தியாளர்கள் 'கூட்டணி முடிஞ்சிடுச்சா?' என்று கேட்டார்கள், 'முடிஞ்சிடுச்சு' என்று சொன்னேன். ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம். உதயநிதி மகன் இன்பனாக இருந்தாலும் சரி.. மகேஸின் மகன் இனியனாக இருந்தாலும் சரி.. அவர்களின் நட்பும் தொடர்கிறது.
அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல் நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடருந்து அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப்போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்” என்றார்.