×

“வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- மு.க.ஸ்டாலின்

 

சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு "வள்ளலார் நெடுஞ்சாலை" என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்... வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசு நடந்துவருகிறது” என்றார்.

அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் 8 முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைத்தூண் அமைக்கப்படும். வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும். வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும். Spiritual Alchemy என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும். வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும். மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னாதான கூடங்கள் திறக்கப்படும். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும். சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார்     ஆய்வு மையம் அமைக்கப்படும் எனக் கூறினார்.