“Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்
Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் நடைபெற்றுவரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடைபோடுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும்போதே பவர் புல்லாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலும் கிடைக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. எப்போதுமே திமுக தேர்டல் அறிக்கைதான் ஹீரோ.
தமிழ்நாட்டில் தற்போது பெண் மேயர்கள்தான் அதிகமாக உள்ளனர். பெண்களுக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து திட்டங்களை உருவாக்கியுள்ளோம். எனது தாயார் போல் பலர் வந்துள்ளீர்கள். எனது சகோதரிகள் போல் பலர் வந்துள்ளீர்கள், எனது மகள்கள் போல் பலர் வந்துள்ளீர்கள். மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுக்கிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை தலா ரூ.28,000 தந்துள்ளோம். ” என்றார்.