×

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்- மு.க.ஸ்டாலின்

 

திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சரும், திமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் பயணம் தொடங்கியது திருவண்ணாமலையில் தான். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திருவண்ணாமலை. திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது, வெற்றிக் கனியை பறிப்போம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு. தொண்டர்கள் தான் 'SECRET OF MY ENERGY'. தொண்டர்களை நம்பித்தான் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என முழங்கிக் கொண்டிருக்கிறேன்.

பெரியார், அம்பேத்கர், வள்ளலார் போன்ற தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக திமுக அரசு கொண்டாடிவருகிறது. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும். யாருக்கு என்ன தேவையோ அதை கேட்டு பெற்றுத் தர வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டுவரும் தகுதிவாய்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும். திமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.  திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்காக பார்த்து பார்த்து தொட்டங்களை நிறைவேற்றுவதுதான் திராவிட மாடல் அரசு. நான் முதல்வன் திட்டம் அதிமுக கொண்டுவந்த திட்டமா? பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் யார் கொண்டுவந்த திட்டம்? நம்மை காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் யார் கொண்டுவந்த திட்டம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா?


ஆதி திராவிட, பழங்குடியினர் நல ஆணையத்தை பழனிசாமி ஆட்சியில் கண்டுகொள்ளவே இல்லை. எடப்பாடி பழனிசாமி இன்னும் தரையில்தான் ஊர்ந்து கொண்டிருக்கிறாரா? ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள்கூட ஆகாத நிலையில் ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதுதான் திமுக ஆட்சி. தமிழ்நாடு மாறிக் கொண்டு இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.  தன்னைப்போலவே எல்லாரும் இருப்பார்கள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி பொய் பொய்யாக பேசிவருகிறார். 3 வேளாண் சட்டங்களை ஆதரித்துவிட்டு அதற்கு ஆதரவாகவும் பேசிய போலி விவசாயி பழனிசாமிக்கு விவசாயிகள் பற்றி என்ன தெரியும்? குட்கா முறைகேடுக்கு விஜயபாஸ்கர் வீட்டுக்கு சிபிஐ சோதனைக்கு வந்ததை மறக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.