“உங்க வீட்டு பிள்ளை ஸ்டாலின்... எந்த பாசிச சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது”- மு.க.ஸ்டாலின்
எங்கும் அன்பும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும், கல்வி என்கிற பேராயுதத்தை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கிறிஸ்துவ மக்களுக்காக இன்னும் செய்வோம். சென்னை உள்பட பல இடங்களில் தேவாலயங்களை புனரமைத்துள்ளோம். சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் விழா திகழ்கிறது. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் விழா கிறிஸ்துமஸ் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக திமுக அரசு பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உங்கள் வீட்டு பிள்ளை ஸ்டாலின். எந்த பாசிச சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது. கல்வி என்னும் பேராயுதத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். கல்விக்காக எத்தனையோ திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் கல்விக்காக ஏராளமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.