வெள்ளி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்த மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.