×

அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

 

இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, உறுதிசெய்யும் நமது சமத்துவம், மாண்பு ஆகியவற்றை அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்! முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.