முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா?- மு.க.ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தகுதி மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இன்று அரங்கேறியுள்ள நிகழ்வுகள் அங்கே எந்தளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது என்பதன் கொடூர நினைவூட்டலாக அமைந்துள்ளன. மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட முதலமைச்சரான மாண்புமிகு உமர் அப்துல்லா அவர்கள் 1931-ஆம் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த விரும்பினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சுவர் ஏறிக் குதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படியா நடத்துவது?