"மசோதாவை ஆதரிப்பது தவிர வேறு வாய்ப்பில்லை"- மு. க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை இழப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு. க. ஸ்டாலின், "இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளை எடுத்து கூறினார்கள். அவர்களிடம் திமுகவின் நிலைபாட்டை எடுத்துரைத்தோம். அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாடு என்பதே எங்களுக்கு முதன்மை தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை இழப்போம். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவிடுவோம்.
தென்மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்க்க மசோதாவை ஆதரிப்பது தவிர வேறு வாய்ப்பில்லை. மாநில கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா போராட்டம். குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். மக்கள் தொகை அடிப்படையில் நடந்தால் தமிழகம் பாதிக்கப்படும். ஜனவரிக்கு பின் தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். எங்களை வந்து சந்தித்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் மாற்று திட்டம் எதுவும் இல்லை. அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாமல் போனது" என்றார்.