×

"ஜனநாயகன் லீக் விவகாரம்... நான் பதில் சொல்ல அவசியமில்லை"- மு.க.ஸ்டாலின்

 

ஜனநாயகன் லீக் விவகாரம் தொடர்பாக நான் பதில் சொல்ல அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய்-யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் கடந்த (ஏப்ரல் 9) அந்த படத்தின் குறிப்பிட்ட சில நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்து, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து முழு படமும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜனநாயகன் லீக் விவகாரம் தொடர்பாக நான் பதில் சொல்ல அவசியமில்லை. தோல்வி விரக்தியில் ஈபிஎஸ் பேசுகிறார்,  அதிமுக முகமூடி அணிந்து பாஜக உள்ளே வருகிறது. சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே போட்டி” என்றார்.