“என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்”- திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
May 7, 2026, 19:37 IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தலைமை என்ன முடிவெடுத்தாலும் எம்.எல்.ஏக்கள் கட்டுப்பட வேண்டும். வரும் 10ஆம் தேதி வரை அனைவரும் சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும். சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம். ஆனால் கட்சியின் நலன் கருதி மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.