30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக! சென்னை மக்கள் மகிழ்ச்சி
சென்னை கொருக்குப்பேட்டையில் ரூ.96 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகரில் ரூபாய் 96.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம், மணலி சாலையைப் பயன்படுத்துபவர்களும், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், மணலி சாலை வழித்தடத்தில் செல்பவர்களும் பயன் அடைந்துள்ளனர்.
சென்னை ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதி தண்டையார்பேட்டை மண்டலம் கொருக்குப்பேட்டை எழில் நகரில் ரூபாய் 96.4 கோடி மதிப்பீட்டில் புதியதாக ரயில்வே மேம்பாலம் கட்டும் கட்டுமான பணிகளை கடந்த ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிலையில் ரயில்வே மேம்பாலம் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.