×

“இது வாயில் வடை சுடும் அரசு அல்ல”- மு.க.ஸ்டாலின்

 

கள்ளக்குறிச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு தர வரிசைகள் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்மதான். நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுகவின் ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும். எம்மதமும் சம்மதம் என்கிற தமிழ்நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம்தான், மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவின் கண்களை உறுத்துகிறது.  எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியைத் தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை உங்கள் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழ்நாடு மக்கள் உங்களை ஓட்டுக்களால் விரட்டி அடிப்பார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்பது போல 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. GSDP, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல், தோல் அல்லாத காலணி உறுபத்தி, Startup தரவரிசை என எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடராக உள்ளது.  சிலரைப்போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல இது, சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு இது” என்றார்.