×

வாக்காளப் பெருமக்களே... உங்கள் தலைவர்கள் ஒருவரியில் சொல்வது...

 

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.


மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்கும் ஆபத்தானவன்.

எடப்பாடி பழனிசாமி: பெண்கள், குழந்தைகள், ஏன்? மூதாட்டிகளுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. குடும்ப ஆட்சிக்கு இந்த தேர்தலில் முடிவுகட்டுவோம்.

விஜய்: ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கவும், அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் முடியாது; விசில் புரட்சிக்கு தயாராவோம்.

சீமான்: கூட்டணி வைத்துதான் வெல்ல முடியும் என்பது இல்லை; கொள்கை இருந்தாலே வெல்லலாம். வாக்குக்கு பணம் வாங்குவதால் மக்களுக்கான சேவை என்பது சாத்தியமில்லை.

அன்புமணி: பெண்கள், குழந்தைகளுக்கு துளியும் பாதுகாப்பில்லாத இந்த திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்; எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது.

திருமாவளவன்: விஜயால் 10 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்க முடியாது; அவரின் நோக்கம் திமுகவை வீழ்த்துவது தான்; முதல்வராவது இல்லை.

டிடிவி தினகரன்: திமுக ஆட்சியில் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கி, கூலிப்படையாக மாற்றிவிட்டார்கள்; தமிழ்நாடு கொடுமையான கொலைக்காடாக மாறியுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் போதை கலாச்சாரம் தவிர வேற உங்களால் என்ன குறை சொல்ல முடியும்?

அண்ணாமலை: கடந்த 5 ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது.

கமல்ஹாசன்: உண்மையான தலைவன் என்றால் மக்களுக்கு பிரச்னை வரும் போது ஓடி வரணும்; ஓடி போய்விடக் கூடாது.