×

"மகளிர் இட ஒதுக்கீடு என்பது பம்மாத்து வேலை"- மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டின் போராட்ட குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்களுக்காக போராட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். தமிழ்நாட்டின் போராட்ட குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள். ஆயிரம் எமர்ஜென்சியை பார்க்க நான் தயார், டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள். டெல்லிக்கு தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம். என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வேலைகளை பறிப்பார்கள். தமிழை சிதைக்க இந்தியை திணிப்பார்கள். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை பறிப்பார்கள். தமிழ்நாடு என்ற அடையாளத்தையே அழித்து தட்சிண பிரதேசம் என பெயர் சூட்டிவிடுவார்கள். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை கொடுக்க வேண்டும். பாஜகவும், அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.

மே 7, 2021 அன்று “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!” என நான் தலைநிமிர்ந்து சொன்னபோது, தமிழ்நாடும் தலைநிமிர்ந்துவிடும் என அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையை இன்று காப்பாற்றியிருக்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்தை ஒடுக்க நினைக்கும் பாஜகவின் அதிகாரத் திமிரை அடக்கும் காலம் வந்துவிட்டது. மகளிர் இட ஒதுக்கீடு என்பது பம்மாத்து வேலை. கூட்டாட்சித் தத்துவத்தை மோடி் குழித்தோண்டி புதைக்கிறார். தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று அமித்ஷா சொன்னதாக பழனிசாமி பேசுகிறார். அடிமை பழனிசாமி வேண்டுமானால் அமித்ஷாவின் பேச்சை நம்பலாம், நாங்கள் நம்பத் தயாராக இல்லை” எனார்.