×

“ரோல் மாடல்களை இன்ஸ்டாவில் தேடாதீர்கள்”- மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

 

Likes, Reels-ல கெத்து இல்ல, உங்க ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “Like-ல் கெத்து இல்லை. மதிப்பெண்களில்தான் கெத்து. ரோல் மாடல்களை இன்ஸ்டாவில் தேடாதீர்கள், பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம், அதுவே வாழ்க்கை இல்லை, ரீல்ஸில் பார்ப்பது எல்லாம் Reality என நம்பி விடாதீர்கள். கல்வி, நண்பர்கள், சூழல்தான் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சொல்வதை காதுகொடுத்து கேட்க வேண்டும். மனசுவிட்டு பேச வேண்டும். ஒரு பிரச்சனையென்றால் குழந்தைகள் பயமின்றி, பெற்றோரிடம் பகிரும் அளவுக்கான நம்பிக்கையை அவர்களுக்கு பெற்றோர்கள்தான் கொடுக்க வேண்டும். தன் பெஸ்ட் ஃப்ரெண்ட், அம்மா, அப்பா என்று குழந்தைகள் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ அரசின் திட்டங்கள்தான் காரணம். ஏராளமான போராட்டங்களுக்கு பிறகே மறுக்கப்பட்ட கல்வியின் கதவிகள் திறக்கப்பட்டன. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது. இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இந்தியாவோட மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கிற சக்திகள் கொட்டம் ரொம்ப நாள் நீடிக்காது” என்றார்.