“செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை"- மு.க.ஸ்டாலின்
செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை! சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன். தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்தோடு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா? இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.