×

“கைஸ் நான் தான் உங்க தேவா... இவரு தான் நம்ம சிஎம் கைஸ்”- யாரு சாமி நீங்க?

 

"ரீல்ஸ் நல்லா போடுறீங்க.. அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.." என பண்ருட்டியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு அருகே உள்ள துண்டுகாடு கிராமத்தைச் சேர்ந்த தனுசு - மேரி தம்பதியினரின் இரண்டு மகன்கள் தான் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார்கள். கார்டு வைத்திருந்தால் திருடி விடுவார்கள் பணம் வைத்திருந்தால் பிடுங்கி விடுவார்கள் ஆனால் படிப்பை மட்டும் யாரும் எதுவும் செய்ய முடியாது அனைவரும் படியுங்கள் என்ற ஒற்றை ரிலீஸ் முதல்வரின் கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பியது.

துண்டுகாடு கிராமத்தைச் சேர்ந்த தனுசு தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனராகவும் அவரது மனைவி மேரி முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலும் செய்து வருகின்றனர். சிறிய கூரை வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில் இவர்களுக்கு தேவா, ஜீவா என்ற இரண்டு மகன்கள் தேவா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பும் ஜீவா இரண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த 1 1/2 ஆண்டுகளாக தேவாவும் ஜீவாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பல ரீல்ஸ்கள் அனுப்பி உள்ளார்கள். இந்த ரீல்ஸ்கள் குறைந்த அளவு லைக் கிடைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் படிப்புச் சார்ந்த ரீல்ஸ்களை போட ஆரம்பித்தார்கள். சமீபத்தில் மீண்டும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த போது இரண்டு நாட்கள் லீவு விடலாம் என ஜீவா கேட்பது போன்றும் அதற்கு தேவா இல்லை லீவு வேண்டாம் நாங்கள் படிக்க போக வேண்டும் அனைவரும் படியுங்கள் கார்டு வைத்திருந்தால் திருடி விடுவார்கள் பணம் வைத்திருந்தால் பிடுங்கி விடுவார்கள் கல்வி மட்டும் தான் யாராலும் எடுக்க முடியாதது அனைவரும் படியுங்கள் என கூறும் வீடியோ மிகவும் வைரலானது. 


இதன் பிறகு இவர்களை நடிகர் பிரபுதேவா, பார்த்திபன் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர் அவர்களிடமும் இவர்கள் ரிலீஸ் எடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த வீடியோவை பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இவர்களை அழைத்து நேரில் பாராட்டினார். அந்த வீடியோ இன்று வைரலான நிலையில் துண்டுகாடு கிராமத்திற்கு நேரில் சென்று தேவாவையும் ஜீவாவையும் சந்தித்தோம் சுட்டிக் குழந்தைகளாக உள்ளவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு இதுபோன்ற ஒரு அழைப்பு வரும் என எதிர்பார்க்கவே இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அப்பொழுது கூறிய தேவா பத்து நிமிடங்கள் மட்டுமே செல்போனை கையில் எடுப்போம் அந்த பத்து நிமிடத்தில் ரீல்ஸ் போட்டுவிட்டு வைத்து விடுவோம். அந்த ரீல்ஸை எங்களது மாமாவிற்கு அனுப்பி அவர்தான் அதனை போஸ்ட் செய்வார் இப்படி எங்களது ரீல்ஸ் அதிக அளவில் லைக்களை பெற்ற நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் எங்களை பிரமோஷனுக்காக கூப்பிட்டார்கள். 

நாங்கள் பட்டாசு மற்றும் மில்க் ஷேக் போன்ற மூன்று பொருட்களுக்கு மட்டுமே ப்ரமோஷன் செய்துள்ளோம். அதே நேரத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்காக எங்களை கூப்பிட்டார்கள் நாங்கள் போகவில்லை என்று தெரிவித்தனர். மேலும் படிப்பு தான் முக்கியம் அனைவரும் படியுங்கள் என மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தான் கலெக்டராக வேண்டும் என்ற ஆசையில் படிப்பதாகவும் தனது தம்பி போலீசாக வேண்டும் என்ற ஆசையில் படிப்பதாகவும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தேவாவும் ஜீவாவும் தங்கள் படிக்கும் பள்ளியில் முதல் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறுவர்கள் ஆரம்பத்தில் விளையாட்டாக இதனை செய்து கொண்டிருந்ததாகவும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நாங்களும் நம்பவில்லை என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுவர்கள் கூறினால் அது பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்பதால் தான் சிறுவர்கள் மூலம் இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக சிறுவர்களின் மாமா ரூபன் தெரிவித்தார். தங்களது ரிலீஸ் மூலம் தமிழக முதல்வரை கவர்ந்து முதல்வரை சந்தித்தபோது முதல்வருடன் ஒரு ரீல்ஸ் எடுத்து அவர்கள் போட்டது தான் அதில் கூடுதலான ஹைலைட். முதல்வரின் பாராட்டை தொடர்ந்து தற்பொழுது தமிழக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டனர் தேவாவும், ஜீவாவும்.