×

வரும் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின் முக ஸ்டாலின் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 17 ஆம் தேதி டெல்லிக்கு செல்லவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, கரும்பூஞ்சை மருந்து வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி, நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வை திமுக ஆரம்பத்திலிருந்தே
 

முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின் முக ஸ்டாலின் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 17 ஆம் தேதி டெல்லிக்கு செல்லவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு, கரும்பூஞ்சை மருந்து வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி, நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வை திமுக ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருகிறது. நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், அதன் தாக்கத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவை முதல்வர் முக ஸ்டாலின் நியமித்தார் என்பது குறிப்பிடதக்கது.