திடீரென மெரினாவுக்கு சென்று பொங்கல் பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து வசிப்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளான இன்று (15.1.2026) சென்னை - 3வது கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, அவர்கள் வசிப்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது, அவர்கள் வசிப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே அங்கு வசித்துவரும் திரு. துரை-சுமதி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு "வெற்றி” என்று பெயர் சூட்டினார். .” எனக் குறிப்பிட்டுள்ளார்.