×

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
 
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க,ஸ்டாலின், “இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்.

எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன். அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.