×

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
 

 

சென்னை தேனாம்பேட்டை  ஆஸ்டின் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை கால இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும் , காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால்  பெய்த கனமழையினாலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.  இதனால் சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேங்கிக்கிடக்கும் நீரால் பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை  ஆஸ்டின் நகரில் மழை கால இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வடகிழக்கு பருவமழை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்போடு மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை தொடங்குவதன் அடையாளமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ,சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.