×

பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்... ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் அரசு தொகுப்பு வீட்டை சீரமைப்பதற்கு இடிக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில்  சிக்கிய இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்  முனியன்.  இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை இடிக்கும் பணிகளை இரண்டு  பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்ததில் அபினேஷ் 11ம்வகுப்பு  மற்றும் முகேஷ் 9ம்வகுப்பு  ஆகிய இரண்டு அரசு  பள்ளி மாணவர்கள் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். அருகில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஸ்ரீராம் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அபினேஷம் முருகேஷம் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு பேரும் பாட்டி வீட்டிற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பாக இளங்காடு கிராமத்திற்கு சென்றதாக தெரிகிறது.

தகவல் அறிந்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் மற்றும்  தீயணைப்பு துறை வீரர்கள், பொதுமக்கள் சம்பவம் இடத்திற்கு சென்று இடிபாடுகளில்  சிக்கிய இரண்டு உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அருகில்  இருந்த பலத்த  காயம் அடைந்த ஸ்ரீராம் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  மேலும் இது குறித்து பொன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டை சீரமைக்கும் போது வீடு இடிந்து இடிந்து விழுந்ததில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான  சம்பவம் இளங்காடு  கிராமமே  பெரும் சோகத்தில்  மூழ்கி  உள்ளது.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.