மதுரை மண்டல தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவு
Jul 7, 2025, 21:42 IST
மதுரை மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகரில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுடனான ஒன்-டூ-ஒன் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின்போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.