×

கொடைக்கானலில் வாக்கிங் போன மு.க.ஸ்டாலின்! செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

 

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் தூய்மை பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் என அனைவரிடமும் நலம் விசாரித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து கொடைக்கானலுக்கு நான்கு நாள் பயணமாக குடும்பத்தினருடன் தமிழக முதல்வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று கொடைக்கானல் வந்தடைந்தார். கொடைக்கானலுக்கு நேற்று வரும் வழியில் சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு அளித்த நிலையில் இன்று காலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு நடை பயிற்சி மேற்கொண்டார்.

நடை பயிற்சியின் போது கொடைக்கானலுக்கு விடுமுறையை ஒட்டி கொடைக்கானலை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானருடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்த நிலையில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளிடமும் தங்களுடைய தொகுதி எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? என்று கணிசமாக கேட்டு கொடைக்கானல் பகுதியில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களிடமும் புகைப்படங்கள் எடுத்து சுமார் ஒரு மணி நேர நடை பயிற்சி முடிவு செய்து மீண்டும் நட்சத்திர விடுதிக்கு திரும்பினார்.