×

தமிழக மக்கள் தான் சுயாட்சி நாயகர்கள்...  - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
  

 

தமிழக மக்கள் தான் சுயாட்சி நாயகர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கல்வியாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ' மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு ' எனும் தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழக மக்கள் தான் சுயாட்சி நாயகர்கள். என்னை பொறுத்தவரை வெற்றி என்பது குழு முயற்சி. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்பது, தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி.  மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், மத்திய அரசின் ஏஜென்ட் ஆக நியமிக்கப்பட்ட தற்காலிகமாக தங்கி உள்ள ஆளுநர் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்களுக்கு என்ன மரியாதை? ஓட்டுக்கு என்ன மரியாதை? ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் உங்களுக்கு சம்பளம் தருவது மாநில அரசு. பல்கலையை நிர்வகிக்கும் துணைவேந்தரை கவர்னர் நியமிப்பது எப்படி நியாயம்?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பூனைக்கு மணி கட்டி உள்ளனர். மாநில அரசின் சட்டத்தின் மேல், ஒரு மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு உள்ளது. மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால் 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியிருந்தால் 3 மாதத்திற்குள் அனுப்ப வேண்டும். 2வது முறை வந்தால் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர். கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு வைத்தது மிகப்பெரிய வெற்றி. .

திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. இளைஞர்களுக்காக செயல்படுத்திய திட்டம் எல்லாம் அனைவருக்கும் தெரியும். கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகள், மூடநம்பிக்கை பரப்பும் இடமாக இருக்கக்கூடாது. அறிவியல் ரீதியான அணுகுமுறை, சமூக நீதியை கற்றுத்தரும் இடமாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சி நடத்துகிறதோ, இதற்கு எதிராக பேசுபவர்களை அழைத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பல்கலைகள் வளர்த்து எடுக்க முயற்சி செய்கிறோம். படிப்பு யாராவது பயனற்றது என சொல்பவர்களை அமைதியாக வெளியேற்றுங்கள் என்றார்.