×

“உங்க அப்பாவ காணோம்” என உசுப்பேத்திய விஜயால் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு

 

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்க அப்பா எங்கப்பா காணோம் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கிண்டலடித்து இருந்த நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்புறம் இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதியாக இருப்பதால் திமுகவுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மு.க ஸ்டாலினுக்கு உள்ளது. முதல்வருக்காகவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இத்தொகுதியில் சுழன்று வருவதாக தெரிகிறது. முக ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால் மூத்த நிர்வாகிகள் அவரை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முக ஸ்டாலின் வருவார் என்றும் விஜய்க்கு அவர் டப் கொடுப்பார் என்றும் திமுகவினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.