×

பெரியார் சிலை மீது சாயம் ஊற்றியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி
 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதற்கு கண்டனம் தெரிவித்து மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.