×


கலைஞர் நூற்றாண்டு விழா...திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.