×

“அரசியல்வாதிகளுக்கு நல்லகண்ணு ஒரு பாடம்”- மு.க.ஸ்டாலின்
 

 

சிபிஐ மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுவாழ்வில் இருப்பவர்கள், அரசியல்வாதியாக இருக்கக்கூடியவர்கள் என அனைவருக்கும் தோழர் நல்லகண்ணு ஒரு பாடம். அவரது மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அனைவருமே  வருந்தக்கூடிய செய்தி” என்றார்.