×

முதல்வர் விஜய் உடன் மு.க. அழகிரி மகள் கயல்விழி சந்திப்பு

 

தலைமைச் செயலகத்திற்கு வந்த மு.க. அழகிரி மகள் கயல்விழி இன்று முதல்வரை சந்தித்தார். 


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து இருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு மு.க முத்துவை அதிமுகவில் இணைத்து கருணாநிதி மற்றும் தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் பேச வைத்தார். ஆனால் அதிமுகவில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இன்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருடைய அண்ணன் அழகிரி அரசியலிருந்து ஒதுங்கி உள்ளார். ஆனால் அவரது மகள் கயல்விழி த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற விழாவிலும் பங்கேற்றார். இன்று தலைமைச்செயலகத்தில் விஜயையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை கூறினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறினார்.  விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணைகிறார்.