மு.க.அழகிரி ஷாக்..! அதிமுகவில் இணைகிறார் அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன்..?
திமுகவில் தற்போது உள்கட்சி பூசல்களை சமாளிக்க துவங்கியிருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் திமுக கூட்டணியில் அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் ஒரு பக்கம் போராடி வருகிறது.
இந்நிலையில், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் மதுரை மேயர் பி.எம் மன்னன் தற்போது அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னன் மூன்று முறை திமுக தலைமையிடம் மன்னிப்பு கடிதம் வழங்கிய நிலையில், மீண்டும் திமுகவில் இணைக்காத காரணத்தினால் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கெனவே 12 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் முடங்கி இருந்த நிலையில் இப்படியே போனால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என கருதிய மன்னன், அதிமுகவில் இணைய முடிவு செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.