×

விஜயகாந்த் உடல்நிலை : பொய்யான அறிக்கை விட்ட தேமுதிக ; மருத்துவமனை சொல்லும் புதிய விளக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட் 19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட் 19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து இரண்டு முரண்பட்ட அறிக்கைகள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடையத் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.