☰
×

"உங்க பையன் வெற்றியை காண குறைந்தது 25 ஆண்டுகளுக்கு மேலாகும்"- ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி 

 

இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு திமுக தலைவரும், அவரது தந்தையுமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

அவரது வாழ்த்து பதிவில், "கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!  Let your work define you! உழைப்பால் உயர்ந்திடு!  இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! #HBDUdhay" எனக் குறிப்பிட்டிருந்தார். 

உதயநிதிக்கு மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு குறித்து கிண்டல் செய்துள்ள அமைச்சர் வெங்கட்ரமணன், "எதற்கெடுத்தாலும் வெற்றி வெற்றி என்று பெயர் வைக்கிறார்களே என்று கேட்டுவிட்டு தன் மகனிடம் வெற்றியை கண்டிடு என்கிறாரே, வெற்றியை காண குறைந்தது அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரை மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றுள்ள வெற்றித்தலைவரை பார்த்துக் கொண்டிருக்க சொல்லுங்கள். பார்த்து கற்றுக் கொள்ள சொல்லுங்கள். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. நடக்கவும் நடக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

-