×

பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் தான் செயல்பட வேண்டும்- அமைச்சர் விஸ்வநாதன் 

 

பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் தான் செயல்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட பல்கலை.களில் துணைவேந்தர்கள் இல்லை. துணை வேந்தர்களை நியமிக்க வழக்கமாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தற்போது 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம். 90 கலைக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமிக்க வேண்டி இருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த காலங்களில் பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் எங்கள் ஆட்சி காலத்தில் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும். பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் தான் தொடர வேண்டுமென ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.