☰
×

எல் நினோவால் 20-60% மழை குறைவு, வடகிழக்கு பருவமழை ஏமாற்றம்- அமைச்சர் வினோத் பரபரப்பு அறிவிப்பு

 

2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 20-60 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத நிலை காணப்படுகிறது. வடகிழக்கு மண்டலம், காவிரி டெல்டா மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மழையளவு மற்றும் மண் ஈரப்பதம் அடிப்படையிலான மதிப்பீடுகள், பல மாவட்டங்களில் பயிர்களுக்கான மண் ஈரப்பத பற்றாக்குறை நிலை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான மழை பற்றாக்குறையும் குறிப்பிடத்தக்க அளவு பயிர் பாதிப்புகளும் காணப்படுவதால், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய மழை பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக எல் நினோ (El Nino) நிகழ்வு கருதப்படுகிறது. தற்போது பசிபிக் பெருங்கடல் மட்ட வெப்பநிலையானது +3°C-க்கும் மேல் உயர்ந்து “வலுவான எல் நினோ” சூழல் நிலவி வருகிறது. எல் நினோ காரணமாக சீரற்ற மழைப்பொழிவு நிலை, பயிர்ப்பட்டின் நிலைகளில் மண் ஈரப்பதம் குறைதல் மற்றும் வறட்சிக்குப் பருவகை காலங்கள் நீர்தேக்கம் நிரம்ப நிரம்ப நிலை, ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் வறண்டு வரும் வேளை, காய்ந்த காலங்கள் நீடிக்கும் நிலை, விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலைமை உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையை முன்னிட்டு, மாவட்டங்களில் பயிர் நிலை, நீர் இருப்பு மற்றும் வறட்சி பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேளாண்மைத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை மற்றும் சாகுபடித் துறை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்கள் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு உப குழுக்களைக் கள ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் பயிர்களைப் பாதுகாக்க திறமையான நீர் மேலாண்மை, உயிரிகளுக்கு பாசனம், சரியான அடிப்படையிலான நீர் பகிர்வு மற்றும் ஈரப்பதக் குறைபாடு நிலவுகின்ற பகுதிகளில் 1% வெண்ணை பொட்டாஷ் (KCl) மற்றும் PPFM தெளிப்பு போன்ற வறட்சித் தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, வறட்சியிலிருந்து பயிர்களை மீட்டு சேதத்தைக் குறைத்து மகசூலைப் பாதுகாக்க உதவும்.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இது தற்போதைய ஏர்ப்படும் பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வேளாண்மைத் துறை மற்றும் பல்கலைக்கழக வல்லுநர்கள் வழங்கும் பரிந்துரைகளை விவசாயிகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை விவசாயிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்நிலைமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. விவசாயப் பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு என்றும் துணை நிற்கும்.