“உருவத்தை கேலி செய்வது கீழ்த்தரமான அரசியல்”- ஸ்டாலினுக்கு அமைச்சர் வினோத் கண்டனம்
உருவத்தை கேலி செய்வது, ஆபாசமாகப் பேசுவது, அவதூறு போன்ற கீழ்த்தரமான அரசியலை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதை திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.
உருவத்தை கேலி செய்வது, ஆபாசமாகப் பேசுவது, அவதூறு போன்ற கீழ்த்தரமான அரசியலை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதை திரு. @mkstalin அவர்களின் பேச்சு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
— vinoth Ravi (@vinothravi11) October 2, 2026
பெண் வேட்பாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை மதிக்கத் தெரியாத இந்த…
இதுதொடர்பாக அமைச்சர் வினோத் தனது எக்ஸ் தளத்தில், “உருவத்தை கேலி செய்வது, ஆபாசமாகப் பேசுவது, அவதூறு போன்ற கீழ்த்தரமான அரசியலை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதை திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பெண் வேட்பாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை மதிக்கத் தெரியாத இந்த அரசியல் நாகரிகத்தை மக்கள் நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.