கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் பெருமிதம்..!
தமிழ்நாடு வேளாண் அமைச்சர் வினோத் 2026-27-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டை தரணி போற்ற செய்தவர் என்றும் பணநாயகத்தை தோற்றகடித்த பாரமனின் ஜனநாயகன் என்றும் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பட்ஜெட் உரையைத் தொடங்கினார் அமைச்சர் விஜய். கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
அப்போது அவர்,
சட்டமன்றங்களுக்கும் நாயகன் நீங்கள்தான்.
பணநாயகத்தை முறியடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள்.
உயர்ந்த எண்ணங்களைச் செயலாக்கி,
ஊழலை வேரறுத்து,
தன்னிறைவு என்னும் தேனை வளர்த்து,
மக்களாட்சியின் பெரும் மரத்தைப் பற்றிப் பிடித்து நிற்கும்
கோட்-சூட் போட்ட விவசாயி நீங்கள்.
விசில் என்பது வெறும் ஒலியல்ல
அது பாமரர்களின் மொழி.
அதுவே உலகின் பொதுமொழி.
விசில்.
காற்று இசைத்த முதல் ராகம்.
மனிதன் பயன்படுத்திய முதல் தகவல் தொடர்பு மொழி.
காது கொடுத்துக் கேளுங்கள்.
விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது.
அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது
ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க,
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க,
நேர்மையின் பாதையில் தமிழகம் பயணிக்க வேண்டும் என்பதே உங்கள் லட்சியம் என்று கவிதை போல் வாசித்தார்.
”கோட் சூட் அணிந்த விவசாயி விஜய்.. பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதலமைச்சர் விஜய்” என தொடர்ந்து புகழ்ந்த அமைச்சர்.. உடனே எதிர் தரப்பில் இருந்து வந்த சத்தம்.. குறுக்கிட்டு சபாநாயகர் செய்த செயல்..!#TNBudget2026 | #TNGovt | #Budget2026 | #CMVijay | #TVK | #ADMK | #DMK |… pic.twitter.com/OzpIrpk3MD
— Polimer News (@polimernews) August 6, 2026