×

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் 3.5 % ஆக குறைவு- அமைச்சர் விஜயபாஸ்கர்

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சதவீதம் 3.5 % ஆக குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே ஒருநாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகிறது. 10 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆர்டி பிசிஆர் முடிவு வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி
 

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சதவீதம் 3.5 % ஆக குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே ஒருநாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகிறது. 10 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆர்டி பிசிஆர் முடிவு வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 4,39,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சுய கட்டுப்பாடுடன் கூடிய தீபாவளியை கொண்டாட வேண்டும். ஏனெனில் Festival cluster உருவாக காரணமாகிவிடக் கூடாது. அப்போதுதான் இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க முடியும். நோய் பரவலை தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். பெலுடா பரிசோதனையை விட ஆர்டி பிசிஆர் பரிசோதனையின் நம்பகத் தன்மை தான் அதிகம். விலையும் குறைவு. 7.5 இட ஒதுக்கீட்டின் காரணமாக 304 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இது கூடுவதற்கும் வாய்ப்புள்ளது. பல் மருத்துவம், சித்தா உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படும்” எனக் கூறினார்.