×

தமிழகத்தில் படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வருகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “100 வயது முதியவர், 92 வயது பெண்மணி ஆகியோரை சிறப்பான சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை குணப்படுத்தியுள்ளது. படிப்படியாக தமிழகத்தில் நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான ஓ.பி.சியில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த ஆண்டு
 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “100 வயது முதியவர், 92 வயது பெண்மணி ஆகியோரை சிறப்பான சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை குணப்படுத்தியுள்ளது. படிப்படியாக தமிழகத்தில் நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான ஓ.பி.சியில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். திமுக குற்றம்சாட்டுவது போன்ற கற்பனையான விஷயங்களை தமிழக அரசு செய்யாது. மாநில உரிமைகளை தமிழக அரசு என்றும் நிலைநாட்டும். நீதிமன்ற தீர்ப்பின் 105வது பக்கத்தை ஸ்டாலின் தெளிவாக படிக்க வேண்டும், அதன் பிறகு அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் கூறினார்.