×

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 CT கருவிகளுடன் கூடிய Post Covid Centre- ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Post Covid Centre-க்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிகிச்சைக்காக வர வேண்டும். இந்த மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவையை கொண்டு வந்திருக்கிறோம், இந்தியாவின் 113 சி.டி.ஸ்கேன் இருக்கு
 

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 CT கருவிகளுடன் கூடிய Post Covid Centre- ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Post Covid Centre-க்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிகிச்சைக்காக வர வேண்டும். இந்த மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவையை கொண்டு வந்திருக்கிறோம், இந்தியாவின் 113 சி.டி.ஸ்கேன் இருக்கு ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் நிச்சயமாக அவர்கள் உடல் பரிசோதனையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் முப்பரிமாண முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இரண்டால் அலை வந்தாலும் அதையும் எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” எனக் கூறினார்.