×

கொரோனாவை கட்டுப்படுத்த இதை செய்யுங்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் அட்வைஸ்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் மக்கள் அனாவசியமாக வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 64,603 ஆக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. We are together in
 

தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் சென்னை,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.  வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில்  மக்கள் அனாவசியமாக வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 64,603 ஆக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உள்ள நிலையில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா கட்டுபடுத்துவது குறித்து கூறியுள்ளார். அதில், “நாம் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அதை தடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள், நாம் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேலும் இதை கட்டுப்படுத்த முக்கியமாக இருக்க வேண்டியது சுய கட்டுப்பாடு தான் . மக்கள் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். இது நம் ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றும். தடுப்பூசி மற்றும் மருந்தே இல்லாத கொடிய வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் அதற்கு சுய கட்டுப்பாடு என்பது மிக முக்கியம்” என்று கூறியுள்ளார்.